‘குவாட்டர்’ அடிச்சிட்டு…

‘டாஸ்மாக்’ – கூலி தொழிலாளர்கள்,தொழிலாளர்கள்,நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த குடி பழக்கமே இல்லாத பெண்களை மிகக் கொடூரமாகப் பாதி்க்கிறது. அவர்கள் அதற்கு எதிராகச் செயலாற்ற கிளம்பியிருக்கிறார்கள்.

ஆகவே, அதிமுக அரசுக்கு எதிராக மது பிரச்சினையை மட்டும் தான் பெரிய அளவில் பயன்படுத்த முடியும் என்பதால், ஒரு குடிகாரனைப்போல் முன்னுக்குப் பின் முரணாக எல்லா அரசியல் கட்சிகளும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

மதவெறி, ஜாதிவெறிக் கொலைகள் குறித்துக் கள்ள மவுனவிரதம் இருந்தவர்கள் கூட மதுவுக்கு எதிராக மூச்சு முட்ட பேசுவது அதனால் தான்.

ஜாதிவெறியல் படுகொலை செய்யப்பட்ட பிணத்தைத் தாண்டி, குடியால் இறந்த பிணத்தின் முன் குத்துக்கால் போட்டு உட்கார்ந்து ஒப்பாரி வைப்பதும் அதுவே தான்.

ஜாதிவெறி, மதவெறி குறித்துக் கருத்துகூடச் சொல்லாமல் கமுக்கமாக இருந்துவிட்டு, மதுவுக்கு ‘மட்டும்’ எதிராகப் பேசுபவர்களை,
‘குவாட்டர்’ அடிச்சிட்டு குடிகாரனைப்போல் அசிங்க அசிங்கமா திட்டுலாமான்னு தோணுது. நீங்க என்ன சொல்றீங்க?
*
(18 தேதி புதியதலைமுறை தொலைக்காட்சியின் ‘ உரக்க சொல்லுங்கள்’ நிகழ்ச்சிக்காக ‘மது விலக்கு சாத்தியமா?’ என்ற விவாதத்தில் கலந்து கொண்டேன். 18 தேதி பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி, 26 காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.)

டாஸ்மாக் தமிழனும் நீதி தவறாத அரசும்

நன்றி:அதிமுக வினருக்கும் இன்னும் சில..

4 thoughts on “‘குவாட்டர்’ அடிச்சிட்டு…

  1. தி மு க தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு அமுல் படுத்த படும் என்று அறிக்கை விட்டு இருக்கிறார். சாத்தியமா என்று தெரிய வில்லை. உண்மை என்றால் நிச்சயம் அவர் பாராட்டபட வேண்டியவர்

  2. வர்ரதேர்தல்..சாராயக்கடையை மூடுவதா…??? அல்லது சாராயத்தை இலவசமாக கொடுப்பதா… என்ற வாய்சாகத்தான் இரக்கும்போல….

Leave a Reply

%d bloggers like this: