‘கையில காசு வாயில தோசை’

காவிரி பிரச்சினைதான் என்றில்லை, முல்லை பெரியாறிலும் கூடக் காங்கிரஸ், பாஜக, சிபிஎம் போன்ற தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு ஆதரவாகச் சட்டப்படிகூட நடந்து கொள்ளாது என்பது மட்டுமல்ல சட்ட விரோதமாகவும் நடந்து கொள்ளும்.

காரணம் கன்னட, மலையாள மக்கள் மீதான பாசம் அல்ல. தேசிய கட்சிகள் இரண்டு மாநிலங்களிலும் ஆளும் கட்சி அல்லது எதிர்கட்சி என்ற பெரிய சக்தியாக இருப்பதால்,
நதி நீர் பிரச்சினையைத் தூண்டி அதன் மூலமாக ஆட்சியைப் பிடிப்பது, ஆட்சியைக் கவிழ்ப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

மாறாகத் தமிழகத்திற்கு ஆதரவாக நடந்து கொள்வது தேசிய கட்சிகளுக்கு எந்தப் பயனும் தராது. அது அவர்களுக்கு ஓட்டாக மாறாது என்பது மட்டுமல்ல, கர்நாடக, கேரளவில் செல்வாக்கு முற்றிலும் இழந்து விடும் என்பதினாலும்.

அதனால்தான் கன்னடன் Vs தமிழன், மலையாளி Vs தமிழன் என்கிற இனவாத அரசியலை அதற்கு எதிரான கண்ணோட்டம் கொண்ட தேசிய கட்சிகள் திட்டமிட்டுச் செய்கின்றன. இதுதான் தேர்தல் ஜனநாயகம்.

தமிழர்களின் மாநிலங்களான புதுச்சேரிக்கும் தமிழகத்திற்கும் எதாவது எல்லை பிரச்சினை உண்டாக்கப்பட்டால், காங்கிரஸ் நிச்சயம் புதுச்சேரி பக்கம் தான் நிற்கும். காரணம் வெளிப்படையானது. அது அங்கு ஆளுங்கட்சி.

இதை இன்னும் எளிமையாகப் புரிந்து கொள்ள உதாரணம் சொல்கிறேன்,
‘நாமெல்லாம் தமிழன்’ ஒற்றுமையை வலியுறுத்துகிற தமிழ் தேசியவாதிகள், தலித் தமிழர்கள் மீது பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் தாக்குதல் நடத்தும்போது, தலைமறைவாகிவிடுவார்கள்.

ஜாதிய வன்முறையைக் கண்டிக்காமல் இருப்பதில் அவர்களின் ஜாதி உணர்வு மட்டுமல்ல,

அதைப் பெயரளவில் கண்டித்தால்கூடத் தன் கட்சியில் இருக்கிற அந்த ஜாதியை சேர்ந்தவர்கள் அல்லது அதிக அளவிலான பிற்படுத்தப்பட்டவர்கள் கோபித்துக் கொள்வார்கள், பதிலுக்கு தலித் இளைஞர்களும் நம் கட்சியில் சேர மாட்டார்கள் என்கிற காரணம் பிரதானமாக இருப்பதுபோலவே,

‘நாமெல்லாம் இந்தியர்’ என்று தேசிய ஒருமைப்பாடு பேசுகிற கட்சிகள், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான நடக்கிற இனவாத தாக்குதலின்போதும் கள்ள மவுனம் காப்பதும் அதுபோலவேதான்.

8 thoughts on “‘கையில காசு வாயில தோசை’

  1. 82 shares
    Comments
    Mani Kandan
    Mani Kandan · Friends with Kannan Kananathan
    திராவிட கட்சிகள் இந்தியாவை ஆளனும் அது சாத்தியமில்லை தேசிய கட்சிகளான கதரும் காவியும் தமிழகத்த ஆளனும் அதுவும் சாத்தியமில்லை
    இரண்டுமே நடக்காத வரையில் நமக்கு நல்லது நடக்க வாய்ப்பில்லை
    Like · Reply · 3 · 14 September at 23:27
    Thirumoorthy
    Thirumoorthy · Friends with வில்வம் கியூபா and 17 others
    திராவிட சிந்தனையை ஒழிக்க நினைக்கிறார்கள்.
    Unlike · Reply · 1 · 14 September at 23:31
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi ஜாதிய வன்முறையைக் கண்டித்தால் அதிக அளவிலான பிற்படுத்தப்பட்டவர்கள் கோபித்துக் கொள்வார்கள், பதிலுக்கு தலித் இளைஞர்களும் நம் கட்சியில் சேர மாட்டார்கள் என்கிற காரணம் பிரதானமாக இருப்பதுபோலவே,
    Like · Reply · 4 · 14 September at 23:35 · Edited
    Thirumoorthy
    Thirumoorthy · Friends with வில்வம் கியூபா and 17 others
    சென்ற ஞாயிறு நிகழ்ச்சி link போடுங்க. அன்று வர முடியவில்லை.
    Like · Reply · 14 September at 23:54
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi என்னிடம் இல்லை.
    Like · Reply · 1 · 14 September at 23:55
    Thirumoorthy
    Thirumoorthy · Friends with வில்வம் கியூபா and 17 others
    Ramesh Periyar
    Unlike · Reply · 1 · 14 September at 23:56
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    ஞானபாரதி வீராசாமி
    ஞானபாரதி வீராசாமி · 9 mutual friends
    CPM கட்சியையும் இதில் சேர்த்துவிட்டீர்களே தோழர்…
    Like · Reply · 15 September at 00:01
    த.அறிவு மதி
    த.அறிவு மதி காங்கிரசும் — பா ஜ க — சிபிஎம் ஆகிய கட்சிகள் தரகு முதலாளிகளின் கைக்குழந்தைகள் ஆகையால் ஆளும் வர்க்கத்திற்கு எந்த சேதரமும் இல்லாமல் தேசிய
    இனங்களை ஒடுக்குவதிலும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுப்பதிலும் எல்லோரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் இதில் சிபிஎம் விதிவிலக்கல்ல வீராசாமி
    Like · Reply · 15 September at 08:58
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi முல்லை பெரியாறு விவகாரத்தில் சிபிஎம் கேரளாவில் இனவாதிகள் போல்தான் நடந்து கொள்கிறது.
    Like · Reply · 4 · 15 September at 10:14
    Raja Sekar
    Raja Sekar Communist Party Of Malayalam – Enna etha kooda Thozlar therunjukama Erukaru?
    Like · Reply · 15 September at 18:34
    ஞானபாரதி வீராசாமி
    ஞானபாரதி வீராசாமி · 9 mutual friends
    திமுக அதிமுக தரகு முதலாளி இல்லையா?
    Like · Reply · 15 September at 18:44
    த.அறிவு மதி
    த.அறிவு மதி மாநில முதலாளித்துவாதிகள் முதலாளிகள்தான்
    Unlike · Reply · 1 · 15 September at 18:51
    த.அறிவு மதி
    த.அறிவு மதி
    த.அறிவு மதி’s photo.
    Unlike · Reply · 1 · 15 September at 21:07
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Palanivel Manickam
    Palanivel Manickam தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி நடைபெற இருக்கும் முழு கடையடைப்புப் போராட்டத்திற்கு பிஜேபி ஆதரவு அளிக்காது # தமிழிசை
    Unlike · Reply · 1 · 15 September at 00:05
    Muthan Perumal
    Muthan Perumal · 2 mutual friends
    அப்டியேதான் திராவிடகட்சியான திமுக அதிமுக இருவரும் பட்டியலின மக்கள் பிரசமூகத்தினரால் தாக்கப்படும்போது பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் பக்கம் ஞாயமே இருந்தாலும் கண்டுகொள்ள மறுக்கிறது வேண்டுமானால் இருதறப்புமீதும் எப்ஐஆர் போட்டுவிடும் ஆதிக்கசாதியினர் தங்களின் பணம் அதிகார பலத்தான் பினையில் வந்துவிடுவார்கள் ஆனால் நீங்கள் தேர்தலில் அவர்களுக்கு ஆதரவு கேட்டும். கொடுப்பீர்கள் மாநில கட்சிக்கு முதலில் புத்திமதி கூறுங்கள்#மதிமாறன்
    Like · Reply · 2 · 15 September at 00:40
    Samad Arafath
    Samad Arafath · 4 mutual friends
    மொத்தத்தில் நம்மள மனுசனாக்கூடா மதிக்கிள ,…பெரியார் சொன்னமாதிரி வெள்ளைக்காரனே ஆண்டுயிருக்கலாம்,..
    Unlike · Reply · 3 · 15 September at 00:41
    Muthan Perumal
    Muthan Perumal · 2 mutual friends
    எதிர் கட்சிதலைவர் திரு ஸ்டாலினுக்கு சொல்லுங்கள் மரக்காணம் சேஷசமுத்திரம் இளவரசன் கோகுல்ராஜ் சங்கர் விஷ்ணுபிர்யா விடயங்களில் எப்படி செயல்பட்டார் நம் மாநிலத்தை சுத்தப்படுத்துங்கள் பிறகு தேசிய கட்சியை கேள்வி கேட்கலாம் ஒருவேளை காங்கிரஸ் பாஜக இங்கு ஆட்சியில் இருந்து இருந்தால் இந்த நிலைமை வராது என்ன பாஜக வை நினைத்துதான் இந்த திமுக அதிமுக வை சகித்துகொள்ள வேண்டியுள்ளது
    Unlike · Reply · 2 · 15 September at 00:48
    Raakkeshkrishna
    Raakkeshkrishna
    Raakkeshkrishna’s photo.
    Unlike · Reply · 1 · 15 September at 00:53
    Raakkeshkrishna
    Raakkeshkrishna
    Raakkeshkrishna’s photo.
    Unlike · Reply · 1 · 15 September at 00:54
    Raakkeshkrishna
    Raakkeshkrishna
    Raakkeshkrishna’s photo.
    Unlike · Reply · 1 · 15 September at 00:55
    Jani Kadir Jk
    Jani Kadir Jk · Friends with Avadi Nasar and 1 other
    கூடிய விரைவில் வீராணம் ஏரி பங்கீட்டு பிரச்சனை வர வாய்ப்புள்ளது.(வர வேண்டாம் என விரும்புகிறேன்)கடலூர் Vs சென்னை.நினைத்தாலே பீதியாக உள்ளது தோழரே.
    Unlike · Reply · 1 · 15 September at 02:42
    Jani Kadir Jk
    Jani Kadir Jk · Friends with Avadi Nasar and 1 other
    எனது பதிவின் நோக்கம்…நீண்ட காலத்துக்கான திட்டங்கள் தீட்டுவதில்..நம் தமிழ் நாடு..வெகுவும் பின்தங்கி உள்ளது
    Like · Reply · 1 · 15 September at 02:53
    Sarathy Photos
    Sarathy Photos திராவிட கட்சிகளின் வேர் ஆலம்விழுத்தை போன்று மிகஆழமானது, அதனால்தான் ஒவொரு தேறுதலின்போதும் கூட்டணிக்காக தேசியத்தலைவர்கள் அமைக்கும் வியூகம் தெரிந்ததே, காவிரிப்பிரச்சனையில் எந்த தேசியத்தலைவர்களும் கருத்துக்கூறாமல் இருப்பதும், UPஇல் – JNUவில் பிரச்சனை வந்தபொழுது அங்குசென்று தர்ணா நடத்திய ragul gandhi அவர்கள் ஆளும் மாநிலத்தில் ஒருதேசியஇனம் அடுத்தமாநிலத்தவர்களால் இனவாதத்தாக்குதல் நடத்தும்பொழுது ஒரு சிறுகருதுகூட தெரிவிக்காமல் இருப்பதிலிருந்து தேசியக்கட்சிகள் தமிழகத்தின்மேல் கொண்டபார்வை தெரிகிறது, மாறாக கொந்தளிப்புமிகுந்த சூழலில் தமிழககாங்கிரஸ் தலைவரை தேர்தெடுப்பதும், ஆளும்கட்சி பிரமாண்ட மேடைஅமைத்து பல்லாயிரம் பேரை கட்சியில் இணைக்கும்விழாவை கொண்டாடுவதும் உண்மை தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டிய விடயம்
    Unlike · Reply · 1 · 15 September at 07:35 · Edited
    Sandra Segaran
    Sandra Segaran · 4 mutual friends
    இந்த விடயத்தில் தமிழ்த் தேசியவாதிகள் மட்டுமல்ல, அதே நிலை எடுக்கும் எல்லாரது செயலும் கண்டிக்கத் தக்கது. ஆனால் அதை மட்டுமே காரணம் காட்டி தமிழர் பிரச்சனைகளில் பாராமுகம் காட்டும் மற்றவர்களின் செயலும் கண்டிக்கத் தக்கதும் ஆகும்.
    Like · Reply · 15 September at 08:48
    வேலு கம்பளத்தான்
    வேலு கம்பளத்தான் · Friends with Senthil Nathan
    “தேர்தல் பாதை திருடர் பாதை ”
    Unlike · Reply · 2 · 15 September at 11:36
    Sugarno Abdulrazack
    Sugarno Abdulrazack அதனால்தான் கன்னடன் Vs தமிழன், மலையாளி Vs தமிழன் என்கிற இனவாத அரசியலை அதற்கு எதிரான கண்ணோட்டம் கொண்ட தேசிய கட்சிகள் திட்டமிட்டுச் செய்கின்றன. இதுதான் தேர்தல் ஜனநாயகம்.
    Like · Reply · 15 September at 12:24
    Shankar GM
    Shankar GM · Friends with ப.தமிழ் வேலன் and 1 other
    இந்த உண்மையை பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவருக்கு புரிய வைப்பதுதான் மிகச் சரியான பணி……. அதை நீங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது மகிழ்ச்சி…….
    Unlike · Reply · 1 · 15 September at 12:46
    Saravanan Rk
    Saravanan Rk //‘நாமெல்லாம் தமிழன்’ ஒற்றுமையை வலியுறுத்துகிற தமிழ் தேசியவாதிகள், தலித் தமிழர்கள் மீது பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் தாக்குதல் நடத்தும்போது, தலைமறைவாகிவிடுவார்கள்.
    ஜாதிய வன்முறையைக் கண்டிக்காமல் இருப்பதில் அவர்களின் ஜாதி உணர்வு மட்டுமல்ல,
    அதைப் பெயரளவில் கண்டித்தால்கூடத் தன் கட்சியில் இருக்கிற அந்த ஜாதியை சேர்ந்தவர்கள் அல்லது அதிக அளவிலான பிற்படுத்தப்பட்டவர்கள் கோபித்துக் கொள்வார்கள், பதிலுக்கு தலித் இளைஞர்களும் நம் கட்சியில் சேர மாட்டார்கள் என்கிற காரணம் பிரதானமாக இருப்பதுபோலவே,// அருமையான எடுத்துக்காட்டு தோழர்
    Unlike · Reply · 2 · 15 September at 12:48
    த.அறிவு மதி
    த.அறிவு மதி
    த.அறிவு மதி’s photo.
    Unlike · Reply · 1 · 15 September at 13:40
    Kandiah Sivagiri
    Kandiah Sivagiri · 3 mutual friends
    இனிமே மாநிலக்கட்சிகளில்
    மற்றமாநிலத்
    தொடர்பற்ற
    கட்சியைத்
    தேர்ந்தெடுக்க
    வேண்டும்
    ###தமிழ்நாட்டுநலன்
    Like · Reply · 15 September at 14:40
    Vanchinathan Palraj
    Vanchinathan Palraj Very clarity article & realistic!! Thanks to Mathimaran Sir.
    Like · Reply · 15 September at 17:54

  2. இந்தியாவில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்தார் பலுசிஸ்தான் தலைவர் ,,,

    உடனடியாக பரிசீலிக்க மோடி முடிவு

  3. // இந்தியாவில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்தார் பலுசிஸ்தான் தலைவர் ,,, உடனடியாக பரிசீலிக்க மோடி முடிவு //
    ——————————-

    உள்ளே நாறுது. தண்ணி தர வக்கில்லாவிட்டால், இந்தியன் யூனியன் எதற்கு என வெளிப்படையாக அனைவரும் பேசுகின்றனர். சோவியத் போல் சிதறும் நாள் வந்துவிட்டது. ஒய்யாரக் கொண்டையிலே ஈறும் பேணும்.

    இப்பொழுது பாக்கிஸ்தானை வம்புக்கிழுத்தால், அவர்கள் காலிஸ்தான், காஷ்மீர், திராவிட நாடு, நக்ஸல் என அனைவருக்கும் அடைக்கலம் தருவர். பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading