‘பேராண்மை’ விடும் ராக்கெட்
S.P. ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை’ திரைப்படத்தின் விமர்சனக் கூட்டம் ‘தமிழ்த் திரைப்படத் திறனாய்வு வட்டம்’ சார்பில் 13-12-2009 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் நடைபெற்றது. அதில் நான் பேசியதின் தொகுப்பு:
பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும் -1
பகுதி – 2
‘பேராண்மை‘ இந்தப் படத்தை பற்றி என்னுடைய இணையப் பக்கத்தில் விமர்சனம் எழுதியிருந்தேன். அதைப் படித்த பல தோழர்கள் “நன்றாக இருக்கிறது” என்றும் “சரியில்லை. ஜனநாதனை எதிர் அணியில் நிறுத்திவிட்டிர்கள்” என்று ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து சொன்னார்கள். இந்த சமயத்தில்தான் தோழர் பாஸ்கர் ஒருநாள் போன் பண்ணி, “பேராண்மை திரைபடத்திற்கு விமர்சனம் கூட்டம் நடத்துகிறோம். ஜனநாதனும் கலந்து கொள்கிறார். நீங்கள் பேச வேண்டும்” என்று கேட்டார்.
நான் “அந்தப் படத்தை பற்றி விமர்சித்து எழுதி இருக்கிறேன். ஜனநாதன் கலந்துகொள்ளும்போது நானும் கலந்து கொண்டு பேசுவது சங்கடத்தை ஏற்படுத்துறதா இருக்கும். வேணாமே” என்றேன்.
ஆனால் தோழர் பாஸ்கர், “பாராட்டியும் பேசுறாங்க… பாராட்டுறது மட்டுமல்ல நம்ம வேலை…. நீங்க உங்க கருத்த சொல்லுங்க… ஜனநாதன் ஒன்னும் தவறா நினைக்க மாட்டார்” என்றார். சரின்னு ஒத்துக்கிட்டேன்.
நேத்து (12-12-2009) இயக்குநர் ஜனநாதன் எனக்கு போன் பண்ணி, “நாளைக்கு முக்கியமான யூனியன் சம்பந்தமான வேலை இருக்கு. அதனால வரமுடியாது. நீங்க வருவதினால்தான் நான் வரல என்று யாரும் நினைச்சுடக் கூடாது” என்று தான் வரமுடியாக சூழலை விளக்கி வருத்தப்பட்டார்.
பேராண்மையை எல்லாரும் இங்கிலிஷ் பாடம் மாதிரி இருக்குன்னு சொல்றாங்க… உண்மையில் அது ரஷ்ய படம். இரண்டாம் உலகப் போரின் போது, 16 ஜெர்மானிய நாஜிகள் ரஷ்ய காட்டுக்குள் ஊடுருவிடுகிறார்கள். தலைவர் ஸ்டாலின் தலைமையிலான 6 கம்யூனிஸ்டுகள், எப்படி அவர்களை வெற்றி கொள்கிறார்கள் என்பதுதான் கதை.
ஆமா, அவர்களை சிப்பாய்கள் என்று சொல்வதை விட கம்யூனிஸ்டுகள்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் ராணுவவீரன் வேறு கம்யூனிஸ்ட் வேறல்ல.
குதிரை தளவாட பட்டறையில் வேலை பார்த்து, லெனின் தலைமையிலான புரட்சியில் பெரும் பங்காற்றியவர் தலைமையில்தான் உலக புகழ் பெற்ற ஸ்டாலின் கிராட் யுத்தம் நடைபெற்றது.
‘பேராண்மை’யின் அடிப்படையான முதன்மையான தவறு புரட்சிகர சூழலில் நடந்த போராட்டத்தை அல்லது போரை, மோசமான இந்திய சூழலுக்கு மாற்றி படம் எடுத்தது.
இது எப்படி என்றால் ‘ஆதிக்க ஜாதிக்காரர்களின் செத்த மாட்டை அப்புறப்படுத்தக்கூடாது, அவர்களின் வீட்டுச் சாவுக்கு, திருவிழா போன்றவைகளுக்கு பறை அடிக்கக் கூடாது’ என்று தாழ்த்தப்பட்ட மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, ஆதிக்க ஜாதிவெறியர்களுக்கு எதிராகப் போராடி ஆதிக்க ஜாதிக்காரர்களால் கொலை செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞனின் போர்குணமிக்க வாழ்க்கையை, கொஞ்சம் மாற்றி (இந்த வரிகளை மட்டும் மேடையில் சொல்ல மறந்துவிட்டேன்)
இடஒதுக்கீட்டில் படித்து அதிகாரியான ஒரு இளைஞன், தன் உயிரை பணயம் வைத்து ஆதிக்கஜாதிக்காரர்களுக்கு ஆதரவாக பங்காளி தகராறில் பாதிக்கப்பட்டு, நின்றுபோன ஊர்கோயில் திருவிழாவை பல சதிகளை முறியடித்து வெற்றிகரமாக நடத்தி முடிக்கிறார். அதற்கு நடுவுல இடஒதுக்கிடுக்கு ஆதரவு, ஏகாதிபத்திய எதிர்ப்பு வசனம் என்று செருகி படம் எடுப்பது எவ்வளவு தவறானதோ, அதுபோல்தான் இந்தப் படத்தை பொருத்தமற்ற இந்தியதேசிய சூழலில் பொருத்தி படம் எடுத்ததும்.
இந்த படத்தில் இடஓதுக்கீட்டு ஆதரவான வசனங்கள் எதிர்நிலையில் இருந்து எழுதப்பட்டிருக்கு. தன்னை ஜாதி பெயர் சொல்லி இழிவாக பேசுகிற உயர் அதிகாரியான கணபதிராம் முன்பு, கதாநாயகன் துருவன், விஜிபி கோல்டன் பீச்சில் ஒருவர் என்ன பண்ணாலும் சிரிக்கமா எந்த சலனமும் காட்டாமல் அமைதியா நிப்பாரே… அதுபோல் எந்த உணர்வும் அற்று அமைதியாக பரிதாபமாக நிற்கிறார்.
ஆனால், கிளைமாக்சுல வெள்ளைக்காரன் துருவனை ‘இந்திய அடிமை நாயே’ என்று சொன்னவுடன் அவனை பாஞ்சு பாஞ்சு அடிக்கிறார். கணபதிராம் என்கிற அந்த ஜாதி வெறி அதிகாரியை அப்படி அடிக்கிறமாதிரி கூட காட்டியிருக்க வேண்டாம். சின்ன எதிர்ப்புகூடவா காட்டமுடியாது.
அப்புறம் ராக்கெட். இந்திய விவசாயத்தை மேம்படுத்த இந்திய அரசு ராக்கெட் விடுதாம். இதுதான் படத்துல பெரிய ராக்கெட்டா இருக்கு. படத்துல வடிவேலு இருந்தும் காமெடி இல்லாத குறையை இந்த ராக்கெட்தான் தீத்து வைக்குது.
புதிய பொருளாதார கொள்கை என்ற கவர்ச்சிகரமான பெயரில் விவசாயத்தை சீரழித்து, இந்திய விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியிருக்கிறது இந்த மோசமான அரசு. படத்தில் அதைப் பற்றி ஒருவார்த்தை கூட இல்லாமல், விவசாயத்திற்கு ராக்கெட் விடுறதா காட்டுறாங்க.
ஏதோ சில நேரங்களில், வெற்றிகரமாக விண்வெளிக்கு ராக்கெட்டை இந்தியா ஏவி இருக்கிறது என்பது உண்மைதான். அவை ‘மெட்டி ஒலி, கோலங்கள், மானாடா மயிலாட’ போன்ற அக்கப்போருகளை சேட்டிலைட் மூலமாக பார்ப்பதற்குத்தான் பயன்பட்டிருகிறதே தவிர, மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படவில்லை. செல்போன் கம்பெனிகாரனுங்களுக்குத்தான் நல்லா சம்பாதிப்பதற்கும் பயன்படுது.
-தொடரும்
தொடர்புடைய பதிவு:
பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்
///நேத்து (12-12-2009) இயக்குநர் ஜனநாதன் எனக்கு போன் பண்ணி, ‘நாளைக்கு முக்கியமான யூனியன் சம்பந்தமான வேலை இருக்கு. அதனால வரமுடியாது. நீங்க வருவதினால்தான் நான் வரல என்று யாரும் நினைச்சுடக் கூடாது’ என்று தான் வரமுடியாக சூழலை விளக்கி வருத்தப்பட்டார்.’///
இது இயக்குநர் ஜனநாதனின் பெருதன்மையை காட்டுகிறது
கருத்தரங்கத்திற்கு நானும் வந்திருந்தேன். பார்வையாளர்களை மாற்று கருத்துகூற அனுமதித்தது நல்ல ஜனநாயகத் தன்மை. ஆனால் மாற்று கருத்துகூற வந்தவர்களில் சிலர் சிறப்பாக தன் கருத்தை பதிய வைத்தார்கள். பலர் ரசிக மனோபாவத்தோட நடந்துகொண்டார்கள்.
மாற்று கருத்து சொல்லவந்த நடிகர்கள், உதவி இயக்குநர்கள், ஜனநாதனின் நண்பர்கள் அவரைப் பற்றிதான் பேசினார்களே தவிர அந்தப் படத்தைப் பற்றி பேசவில்லை. ஜனநாதனிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற தொனிதான் அவர்கள் பேச்சில் இருந்தது.
அந்த ரஷ்ய படத்தை திரையிட்டு இருந்தால், இந்த விமர்சனம் கூட தேவைபட்டிருக்காது.
I have not seen this movie yet. I could get guess about the movie from your write ups. I am sure your views are right, because I feel the same way many times. I will watch the movie and write about it my blog..
There is false view at social equality, many ppl fall prey for it.. for ex, if a upper caste man asking sorry to a lower caste man for his idiotic mistakes considered a ‘noble’ act of that big man just because he gave up his ego.. while, having ego itself is not a good manner and using it against some is a wrong, esply if it’s used against a handicap it’s a criminal act.. but without realizing ppl think that big man asking sorry is a big deal…
on the same line…when R.K Narayanan stood in line to cast his vote almost every indian praised him saying it’s his greatness… he just did his basic job just like any other citizen.
we need to educate people in whole different angle.
i mean, K.R Narayanan (ex president)…
///கிளைமாக்சுல வெள்ளைக்காரன் துருவனை ‘இந்திய அடிமை நாயே’ என்று சொன்னவுடன் அவனை பாஞ்சு பாஞ்சு அடிக்கிறார். கணபதிராம் என்கிற அந்த ஜாதி வெறி அதிகாரியை அப்படி அடிக்கிறமாதிரி கூட காட்டியிருக்க வேண்டாம். சின்ன எதிர்ப்புகூடவா காட்டமுடியாது.///
அதானே!!!!!!
///ஆமா, அவர்களை சிப்பாய்கள் என்று சொல்வதை விட கம்யூனிஸ்டுகள்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் ராணுவவீரன் வேறு கம்யூனிஸ்ட் வேறல்ல.///
மிக சரி. அந்த ரஷ்ய படம் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா?
Dear Thozhar
I have reading yours all books very nice, pls write a new book infuture for eazha viduthalaikkana thaaitamilmakkalin poraattamum,thurogamum-padippanaigal.
Truly
P.Selvaraj
Neelangarai,Chennai-600 041.
அந்த ரஷ்ய படத்தின் பெயரை குறிப்பிடவும்…
ரஷ்யப் படத்தின் பெயர் மற்றும் விவரங்கள் –
THE DAWNS HERE ARE QUlET
Written by Boris VASSlLYEV|Stanislav ROSTOTSKY
Directed by|Stanislav ROSTOTSKY
Director of Photography|Vyacheslav SHUMSKY
Production Designer|Sergey SEREBRENNlKOV
Music by Kirill MOLCHANOV
Starring
Andrei MARTYNOV
lrina DOLGANOVA
Yelena DRAPEKO
Yekaterina MARKOVA
Olga OSTROUMOVA
lrina SHEVCHUK
டொரொன்டில் டவுன்லோட் செய்யலாம்.
இந்தப் படத்தைப் பார்த்தபின் பேராண்மை என்ற குழப்பத்துடன் இதை தயவுசெய்து ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அப்படிச் செய்வது அதிகாலையின் அமைதிக்கு இழைக்கும் அவமானம் ஆகும்.
ஷாஜஹான், புதுதில்லி