கமல்ஹாசன், மணிரத்தினத்தை விட டி.ராஜேந்தரும் ராமராஜனும் முற்போக்கானவர்கள்
S.P. ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை’ திரைப்படத்தின் விமர்சனக் கூட்டம் ‘தமிழ்த் திரைப்படத் திறனாய்வு வட்டம்’ சார்பில் 13-12-2009 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் நடைபெற்றது. அதில் நான் பேசியதின் தொகுப்பு:
பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும் -1
‘பேராண்மை’ விடும் ராக்கெட் – 2
பகுதி – 3
சமூகநீதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இவைகளுக்கு ஆதரவாக வருகிற மேலோட்டமான சில வசனங்கள், அந்த அரசியல் பற்றி ஆர்வம் கொண்ட சிலரை மட்டும்தான் ஈர்க்கும். ஆனால், இதுபோல் எந்த அரசியல் நிலைபாடும் இல்லாமல், சினிமா மேல் உள்ள ஆர்வத்தில், சுவாரஸ்யத்திற்காக ஒரு சினிமாவை பலமுறை பார்க்கும் பெருவாரியான மக்களின் மனதில் பேராண்மை தோற்றும்விக்கும் ஒட்டு மொத்த உணர்வு, மணிரத்தினத்தின் ‘ரோஜா’ படம் தோற்றுவித்த செயற்கையான ‘தேசபக்தி’ உணர்வுதான்.
பார்ப்பன – முதலாளித்துவ ஆதரவு கொண்ட மணிரத்தினம் போன்றவர்கள் இந்திய தேசியத்திற்கு ஆதரவா படம் எடுத்தால், ‘ரோஜா’ மாதிரி எடுப்பாங்க. ஏகாதிபத்திய எதிர்ப்பு, இடஒதுக்கிடு ஆதரவு நிலைபாடு கொண்டவர்கள் இந்திய தேசியத்திற்கு ஆதரவா படம் எடுத்தா, ‘பேராண்மை’ மாதிரி எடுப்பாங்க போல….
அதுக்காக சினிமாவே எடுக்க வேணான்னு சொல்லல… முற்போக்காக எடுக்குறேன்னு இப்படி குழப்பறத தவிர்க்கலாம். உழைக்கும் மக்களின் அரசியலை காண்பிச்சா நேர்மையா தவறில்லாமல் காட்டனும். ஆனால், இந்த சூழலில் அது சாத்தியமில்லை. அதுக்கு உழைக்கும் மக்களின் வாழ்க்கையை சொல்லிட்டுப்போலாம்.
மலையாளத்தில் வந்த செம்மீன் மாதிரி… மீனவர்களின் வாழ்க்கையை மிக உன்னதமா அந்தப் படம் காண்பிச்சிச்சு. பிற சமூக மக்கள் மீனவர்களை புரிந்து கொள்ளவும், அவர்களை மரியாதையாக நடத்தவும், பார்க்கவும் அந்தப் படம் பயன்பட்டது. செம்மீன் நாவலில் சொல்லப்பட்டதில் பாதிதான் படத்துல இருந்தாலும், அந்தப் பாதி சிறப்பாகத்தான் இருந்தது.
ஒரு வேளை செம்மீன் மாதிரி எடுக்க முடியாட்டிகூட பரவாயில்ல, தமிழின் மிக சிறந்த பொழுதுபோக்கு படமான, தில்லானா மோகனாம்பாள் மாதிரி எடுக்கலாம். அல்லது அதையே உல்டா பண்ணி, எளிய மக்களை, எளிய கலையை உள்ளடக்கமாக கொண்டு வந்த கரகாட்டக்காரன் மாதிரியாவது எடுக்கலாம். அதனால எந்த தீங்கும் இல்ல. இநதப் படம் யாரையும் இழிவு படுத்தியும் காட்டல.
என்னைப் பொறுத்தவரை, மணிரத்தினம், கமல், பாலச்சந்தர் இவர்களைவிடவும் டி. ராஜேந்திரர், ராமராஜன் போன்றவர்கள் முற்போக்கனவர்கள்தான். அவர்கள் படம் எதையோ ஒன்னு சம்மந்தமில்லாம சொல்லிட்டு போவுது. அந்த சினிமாக்களால… சமூகத்திற்கு பயன் இல்லாட்டியும் கூட ஆபத்தில்ல.
ஆனால், கமல்ஹாசனின் ‘உன்னை போல் ஒருவன்’ போலவோ, மணிரத்தினத்தின் ‘ரோஜா’ மாதிரி குறிப்பிட்ட மக்களை இழிவு படுத்தியோ அவர்களை குற்றவாளிகளாக சித்திரித்தோ காட்டறதில்ல.
-தொடரும்
தொடர்புடைய பதிவுகள்:
பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும் -1
நீங்கள் கதை, உரையாடல் எழுதி ஒரு படம் எடுங்க அய்யா!
my name is kannan.i seen your website.it is usefull for tamil and tamilan.
my name is kannan. i seen your website.it is useful for tamil and tamilan.it is motivated the tamilians sixth sense. yours ever friend j.kannan
சாதாரண அடித்தட்டு மக்களுக்கும் புரியும்வகையில் திரைப்படம் மூலம் மன மகிழ்ச்சி தந்த எந்த கலைஞரையும் மட்டமாக பேச எவருக்கும் அருகதையில்லை.
எனக்கு படம் பிடித்திருக்கிறது.
///மலையாளத்தில் வந்த செம்மீன் மாதிரி… மீனவர்களின் வாழ்க்கையை மிக உன்னதமா அந்தப் படம் காண்பிச்சிச்சு. பிற சமூக மக்கள் மீனவர்களை புரிந்து கொள்ளவும், அவர்களை மரியாதையாக நடத்தவும், பார்க்கவும் அந்தப் படம் பயன்பட்டது.///
இதுபோல் தமிழில் படங்கள் வரவில்லை என்பது உண்மைதான்.