ஆயிரம் கோடிகளில் ஊழலும்; வடிவேலு காமெடியும்
இப்போதெல்லாம் ஆயிரம் கோடிகள், லட்சம் கோடிகளில் ஊழல் செய்ததாக சொல்கிறார்களே, அது சாத்தியமா?
–சிவகுமார் தாசன், மேலூர்.
ஒரு படத்துல வடிவேலு, தன் சகாக்களுடன் அரிசி கடையில இருக்கிற தராசு, எடக்கல்லு எல்லாத்தையும் திருடிகொண்டுபோய் வித்துடுவாரு. அததெரிஞ்சிகிட்ட, அரிசி கடக்காரரு, ‘அய்யா, அய்யாயிரம் ரூபா பெருமானமுள்ள என் தராச கொடுத்துடுங்கய்யா…’ என்று வடிவேலிடம் கெஞ்சுவாரு.
அதுக்கு வடிவேலு, ஆவேசத்துடன் தன் சகாக்களிடம் ‘அடப்பாவிகளா… அய்யாயிரம் ரூவா பெருமானமுள்ளத வாங்கிக்கிட்டு, நமக்கு அய்நூறு ரூவா குடுத்து ஏமாத்திடாய்யா…. அந்த சேட்டு….’ என்று குமுறுவாரு…
அதுபோல், இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட கட்சிகள், ‘அடப்பாவிகளா, ஆயிரம் கோடிகள், லட்சம் கோடிகள் பெருமானமுள்ளத வாங்கிட்டு, நம்மக்கு வெறும் 50 கோடி குடுத்து ஏமாத்திட்டானுங்களே… இந்த முதலாளிகள் இதுல இவ்வளவு பணம் இருக்கா?’ என்று பொறுமிக் கொண்டு இருப்பார்கள்.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் பிப்ரவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:
கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்
‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்.. இவன் ரொம்ப… நல்லவன்’
சுந்தரராமசாமி நூல்கள் நாட்டுடமை-`நாராயணா, இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா’
B.J.p Ku poga vendiya panam inum iruku athen ipo avanga visaranai nu soluranga…
நடிகர் வடிவேலுவின் இந்தக் காமடி எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்.
//அதுபோல், இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட கட்சிகள், ‘அடப்பாவிகளா, ஆயிரம் கோடிகள், லட்சம் கோடிகள் பெருமானமுள்ளத வாங்கிட்டு, நம்மக்கு வெறும் 50 கோடி குடுத்து ஏமாத்திட்டானுங்களே… இந்த முதலாளிகள் இதுல இவ்வளவு பணம் இருக்கா?’ என்று பொறுமிக் கொண்டு இருப்பார்கள்.//அருமை, உண்மை.