இளிச்சவாய் காதலர்களும்- காதலர் தின வியாபாரிகளும்

காதலர் தினம் பற்றி?

கல்பனா, பாளையங்கோட்டை.

காதலர்களுக்கு என்று ஒரே ஒரு நாளுதானா? உண்மையான காதலர்களுக்கு ஒவ்வொருநாளும் காதலர் தினம்தான்.

இது வர்த்தக தினம்.

வர்த்தகம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, பல பன்னாட்டுக் கம்பெனிகள், தங்கள் பொருட்களை விற்பதற்கு, வருடத்தில் பலநாட்களுக்கு, ‘அம்மா தினம், அப்பா தினம், நண்பர்கள் தினம்’  என்று பெயர் வைத்து, அந்த நாட்களில் பரிசுகள் வாங்கித் தருகிற பழக்கங்களை ஏற்படுத்தி, அமோகமாக வியாபாரம் செய்கிறர்கள்.

2008 ஆம் ஆண்டு காதலர் தினத்திற்கு மட்டும் 1.47 பில்லியன் டாலர்கள் வர்த்தகமாகியிருக்கிறது என்கிறது NRF Report. ஏறக்குறைய 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் காதலர்களிடம் களவாடி இருக்கிறது கம்பெனிகள்.

மொதப் பொண்டாட்டிய கழுத்த நெறிச்சு கொன்னுடடு ரெண்டாவதா ஒரு பொண்ணைக் கூட்டியாந்து வைச்சிக்கிட்டவன், அடுத்தவன் பொண்டாட்டிய கைய புடிச்சி இழுத்தவன், பெண்களை வெறும் பாலியல் பொருட்களாக நினைத்து தன் விருப்பம்போல் பல திருணமங்கள் செய்து கொள்கிறவன், ‘வயதானவன்’ என்கிற அட்வாட்வான்டேஜ எடுத்துக்கிட்டு இளம் பெண்களை தகாத முறையில் தடவுகிறவன் ; இவுனங்க எல்லாம் கூட ‘காதலர் தினம் ஒழுக்கக் கேடானதுன்னு பேசுறாய்ங்க…’ அததான் நம்பளால தாங்க முடியல.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் பிப்ரவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

காதல் – ‘ஜாதி, மதத்தை’ ஒழிக்குமா?

காமவெறிக்கும்பலும் காதலர் தினமும்

6 thoughts on “இளிச்சவாய் காதலர்களும்- காதலர் தின வியாபாரிகளும்

  1. நம்மைப் போல் ஒருசிலர்தானே சொல்லிக் கொண்டிருக்க முடிகின்றது… அவர்களுடைய வியாபாரத் தந்திரத்தை நாம் வெற்றி கொள்ள முடியவில்லையே…

Leave a Reply

%d bloggers like this: