யதார்த்தமா காட்ற ‘தில்’லு ஒரு டைரக்டருக்கும் இல்ல..

‘தில்’ன்னா இது..

முந்தைய இயக்குநர்களைவிடவும், இன்றைய இளம் இயக்குநர்களின் எதார்த்த திரைப்படங்கள் மிகவும் மேம்பட்ட நிலையில் இருப்பதாக நான் கருதுகிறேன்.

-கே.எஸ். சிவபாலன், திருநெல்வேலி.

பழைய, புதிய இயக்குநர்கள் அனைவருமே, சோற்றுக்குள் பூசிணிக்காயை அல்ல, இமயமலையையே மறைக்கிற அளவிற்கு பெரிய கில்லாடிகள்.

இந்திய, தமிழக கிராமங்கள் ஊரு வேறு சேரி வேறு என்ற பாகுபாட்டோடுதான் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஊருக்குள் குளம், பொது சுடுகாடு, கிணறு, ஊர் கோயில் இப்படி பொது தளங்களுக்குள் இன்றுவரை அனுமதிக்கப்படுவதில்லை. அதில் தங்களின் உரிமையைக் கோரினால், அவர்கள் மீது கடுமையான வன்முறை நிகழ்த்தப்படுகிறது.

இப்படி ஒரு பிரம்மாண்ட யதார்த்தம் சீர்கேடாய் முன் நிற்க, நம்ம ‘டைர..டக்கர்கள்’ ஜாதி இந்துக்களின் குடியிருப்புகளான ஊரை மட்டுமே கிராமங்களாக காட்டுகிறார்கள். ‘சேரி’ என்று ஒன்று இருப்பது தங்களுக்கு தெரியாதது போல்தான் நடிக்கிறது அவர்களின் திரைக்கதை.

வட்டார வழக்குல வசனம் பேசறது, பொம்பளய விரட்டுறது, விபச்சாரம் செய்யறது, திருடறது, வப்பாட்டி வச்சிக்கிறது, சோறு திங்கறது, சொறிஞ்சிக்கறது, இதற்கிடையில் சுயஜாதி பெருமை பேசுறது, இதுதான் இவுங்க காட்டுற யதார்த்த சினிமா.

மற்றபடி ஊரும் சேரியுமாய் பிரம்மாண்டமாய் பிரிந்து இருக்கிற கிராமங்களை அப்படியே யதார்த்தமாக காட்டுற ‘தில்’லு ஒருத்தருக்கும் இல்ல.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2011சூன் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

‘பேராண்மை’ அசலும் நகலும்

இயக்குநர் பாலா Vs ஜமீன் – ‘சும்மா…’

பாலாவின் அவன்-இவன்; ‘அவனா நீ..?’

எம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…?

‘ரஜினி, விஜய் – மிஷ்கின், கவுதம் மேனன்’ யார் ஆபத்தானவர்கள்?

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

இயக்குநர் மகேந்திரனின் கதாநாயகிகள் மற்றும் அவர் படங்களை திரும்ப எடுத்த மணிரத்தினம், வசந்த்

4 thoughts on “யதார்த்தமா காட்ற ‘தில்’லு ஒரு டைரக்டருக்கும் இல்ல..

Leave a Reply

%d bloggers like this: