இந்து Vs இந்து – முஸ்லிம்?

மூடம்நம்பிக்கைகளின் மூலமும், ஜாதி வித்தியாசம் சொல்லியும் இன்னும் பல நூதன வழிகளில் பல இத்துக்களைச் சில இந்துக்களே தொடர்ந்து ஏமாற்றிப் பிழைக்கிறார்கள்.

இந்த மோசடிகளை எதிர்க்கவோ, புரிந்து கொள்ளவோ முயற்சிக்காமல்; இதை அம்பலப்படுத்துகிற முற்போக்களார்களைப் பார்த்து,
கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல், ‘நீ முஸ்லீம கேப்பியா?’ என்கிறார்கள்.

இந்து- இந்துவை ஏமாத்துனா.. முஸ்லிமை எதுக்குக் கேக்கனும்? என்னங்க இது நியாயம்?

December 

தமிழ்நாட்டில் முஸ்லீம் கட்சிகள் வளரவே இல்லை!

இந்து என்றால் ஜாதி வெறியனா?

இந்துவா? அது அவுங்க மட்டும்தாங்க

8 thoughts on “இந்து Vs இந்து – முஸ்லிம்?

  1. என்ன நண்பர் மதிமாறன்,இப்படி பொசுக்குன்னு கேட்டுபுட்டீங்க?

    “இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ,,,,,,,,,,,,”என்று அறிவிப்பு வரும்பொழுதுதான் -அது எல்லா சந்து பொந்து இன்டு இடுக்கு என ஓடாமல் ஓடி இதுப்போன படம் – என்று எதிர் விமர்சனம் வருகிறது.
    அதுபோல எங்குமே இல்லாமல் இந்துமததில்மட்டும்தான் இந்த சீர்கேடுகள் என்று சிலர் முழங்கும்பொழுது இதுபோன்ற எதிர் விமர்சங்கள் வரத்தானே செய்யும்.

    அல்லது

    உலக பொது மறையாளராம் மதிமாறன் அவர்கள் பிற மதங்களை தவிர்த்து ஒரு மதம் சார்பாக -இந்து மதத்தை மட்டும்- சீர்திருத்தி முன்னேற்றி விடுகிறாரே ?மற்ற மதங்களை யார் காப்பாற்றுவார்?மதிமாரனை போன்ற உலக பொது மறையாளர்களுக்கு இது அழகல்லவே என சிலர் மனம் வெம்பி கூட அவ்வாறு கேட்டிருக்கலாம்.

    அதுவும்போக நாமும் குற்றங்களையும் குற்றவாளிகளையும் விமர்சிக்கையில் கூட சாதி மதம் எல்லாம் சரிபார்த்து அது அதற்கு தகுந்தபடி சரியாக தானே விமர்சிக்கிறோம்?
    அந்த நடுநிலைமீது கொண்ட பொறாமையால் கூட இருக்கலம் நண்பர் மதிமாறன்.

  2. Neenga en inthu mathathai mattum thirutha muyarchi panringa? vera evanayathu pathi pesina enna agum?

    Inthu va iruntha inthu mathatha pathi enna venalum pesalam nu sattama?
    En ella atheist um ithaiye follow panringa?

    India la hindus % kurainja enna agumnu theriyuma?

    Indhu matham namma culture ku etha mathiri design pannathunu ungalukku theriyatha? Intha nan pesinavudan udane jathi nu arambikka vendam.

  3. உண்மை தான்….பகிர்வுக்கு நன்றி….

    மலர்

  4. // கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல், ‘நீ முஸ்லீம கேப்பியா?’ என்கிறார்கள்.

    இந்து- இந்துவை ஏமாத்துனா.. முஸ்லிமை எதுக்குக் கேக்கனும்? என்னங்க இது நியாயம் //

    Why no one is answering this question. Mr Hariharan, there are plenty of atheist around the world criticizing every religions.

  5. இந்துக்களை ஏமாற்றுகின்றவர்களை விமர்சனம் செய்வதும் தட்டிக்கேட்பதும் அவசியம். ஆனாலும் எல்லா மதங்களின் மீதும் இந்த நிலை இருக்கனும். எல்லா மதத்துலயும் மதம் பிடிச்சவங்க இருக்காங்க. எல்லாரையும் கேட்டே ஆகவேண்டும் என்பதே நடுநிலை என் கருத்து.

  6. ஜெயேந்திரர் தவறு செய்தால் நேரடியாக அவருக்கு கண்டனத்தை கடிதம் மூலமாகவோ,இணையம் மூலமாகவோ தெரிவித்து அதன் பிரதியை சமுக ஊடகங்களில் தெரிவித்தால் பரவாயில்லை.
    அவரை ஒட்டுமொத்த இந்து சமுகத்தின் பிரதிநிதியாக பாவித்துக்கொண்டு அவர் செய்யும் அட்டுழியங்களுக்கு ஒரு மதத்தை சாடுவது முறையான செயல் கிடையாது.
    சமுகத்தில் பணம் படைத்த சிலரால் ஒரு மடத்தையோ ஒரு அமைப்பையோ தோற்றுவித்துகொள்ளமுடியும்.
    பல காரியவாதிகள் அந்த அமைப்பை சுயநலத்தோடு அணுகி தங்களது காரியங்களை சாதித்து கொள்ள முடியும்.
    அவர்களிடம் பணம் இருப்பதால் தங்களை தீர்க்க தரிசிகள் போல போஸ்டர் அடித்து சமுதாயத்தில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுகொண்டதுபோல அடையாளத்தை தோற்றுவித்து கொள்ள முடிகிறது.அதற்காக அவர்களை அனைவரும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் கிடையாது.
    அவர்களின் தவறுகளுக்கு அவர் சார்ந்த மதம் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது.
    அதேபோல காசிருப்பதால் ஒரு சாதியின் பிரதிநிதியாக தங்களை அடையாளப்படுத்தி கொள்பவர்கள செய்யும் தவறுகளை நேரடியாக அவர்களிடமே கேட்கலாமே.
    அதை விடுத்து அதற்கு மதத்தை எதற்கு இழுக்க வேண்டும்?
    தனிப்பட்ட நபர்கள் செய்யும் தவறுகளுக்கு நேரடியாக அவர்களிடமே கேளுங்கள்.
    நாங்கள் மதிமாறனின் கருத்துகளுக்கு பதில் கருத்து கூறுகையில்(அவர் பதில் கூறாத பொழுதும்) நேரடியாக அவருக்கு தானே அனுப்புகிறோம்?
    அதை விடுத்து அவருக்கு சம்பந்தம் இலாத பொதுவான ஒரு சமுக ஊடகத்தில் ஊளை வைப்பதில்லையே?
    நேருக்கு நேர் எனும்பொழுது சம்பந்தப்பட்டவர்களின் விளக்கங்கள் /சுய ரூபங்கள் தெளிவாக தெரிந்துவிடுமே?
    இது நல்லது தானே.
    அதை விடுத்து பொத்தாம் பொதுவாக எதற்கு ஒப்பாரி வைக்கவேண்டும்?

Leave a Reply

%d bloggers like this: