மக்கள் திலகமும் மலிவு விலை மதுவும்
‘நீ தான் ஒரு மிருகம் –
இந்த மதுவில் விழும் நேரம்’ என்று ஒரு நடிகராக மதுவிற்கு எதிராகத் தொடர்ந்து முழுங்கிய எம்.ஜி.ஆர்;
முதலமைச்சராக ஆனவுடனேயே; விஸ்கி, பிராந்தி போன்ற சீமை சரக்கல்ல; பட்ட சரக்கு சாராயத்தையே மலிவு விலை மதுவாக விற்றார்.
இதற்கு இவர் சினிமாவில் குடிகாரனாகவும், முதலமைச்சராக மதுவிற்கு எதிராகவும் இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்?
4 March
உண்மை தான்….என்ன செய்வது யாரும் அவருக்கு அந்த வேடம் கொடுத்திருக்க மாட்டாங்களா இருக்காலம்!!
மலர்
http://periyar.fm/archieves.php?catid=2
ve mathimaran speech click link
மது அருந்துவது தனிமனித உரிமை.தடுக்க மற்றவர்க்கு உரிமை இல்லை.உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் குடிக்காமல் இருங்கள்.மற்றவரை குடிக்கக்கூடாது என்று சொல்லும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது?மாட்டு இறைச்சிக்கு பொருந்தும் அத்தனை நியாயங்களும் மதுவுக்கும் பொருந்தும்.
மக்கள் தெளிவுபெற வேண்டும். திரையில் வரும் அனைத்தும் உண்மை என்னும் மாயையிலிருந்து அவர்கள் வெளியே வரவேண்டும். மது அருந்துவது தனிமனித உரிமைதான், ஆனால் மதுவால் பிறர் குடிகெடுக்க வழி செய்வது நல்ல மனிதனுக்கு அழகல்ல என்பதுதான் ஆசிரியர் அவர்களின் சிந்தனை. உங்களின் சிந்தனை பகுத்தறிவு புரட்சி தொடரட்டும். வாழ்க!!!
Reblogged this on கரியே வயிரம்.