இளையராஜா – Mr, Mrs – OK ரிலீஸ் பண்ணிக்க

ஆங்கிலம் நன்றாகத் தெரிந்த தமிழ் உணர்வு கொண்டவர்கள் ஆங்கிலத்தில் பேசும்போது, ‘திரு, திருமதி’ என்ற தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டார்கள்.

Mr, Mrs என்றே ஆங்கிலத்திற்கு மரியாதைக் கொடுத்துப் பேசுவார்கள்.
ஆனால் தமிழ் – ஆங்கிலம் நன்றாகத் தெரிந்த ஆச்சாரமான பார்ப்பன அறிவாளிகளோ தமிழில் பேசும்போது, எழுதும்போது ‘திரு. திருமதி’ என்று குறிப்பிட மாட்டார்கள்.

ஆங்கிலத்தில் பேசும்போதும் Mr, Mrs என்ற வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்கள், பதிலாக ஸ்ரீ, ஸ்ரீமதி – ‘Shri, Shrimati’ என்று சமஸ்கிருதத்திலேயே குறிப்பிடுவார்கள்.

ஆனால் அவர்கள்தான் சொல்கிறார்கள் தமிழ் உணர்வாளர்களைப் பார்த்து, ‘மொழி வெறிக் கூடாது’ என்று.
13 January

மாயாண்டி பாரதி தன் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விடுவதாக இருந்தார். அதை அடுத்தவர்களுக்குக் கொடுப்பதற்கு எங்களுக்கு வாடகைக்குக் கொடுங்கள் என்று இளையராஜா சகோதரர்கள் கேட்டதற்கு,

அதைக் கட்சியிடம்தான் கேட்க வேண்டும் என்று மாயாண்டி பாரதி சொன்னது எப்படிச் சரி? அவருக்கு தேவை வாடகைதானே. யார் கொடுத்தால் என்ன?

சரி. அவர் சொன்னதுபோல் கட்சியிடம் கேட்டாரா? கட்சி என்ன சொல்லிற்று? என்பதாக விளக்கங்கள் சொல்வது தான் இளையராஜாவிற்குக் கட்சியினர் சொல்கிற பொறுப்பான பதிலாக இருக்கும்.

அதை விடுத்து, இளையராஜாவின் கடந்தகால ஏழ்மையைச் சுட்டிக் காட்டி கேலி பேசுவதும், ‘பாவலர் சகோதரர்களுக்கு உதவி செய்த, வள்ளல், தர்மபிரபு மாயாண்டி பாரதி’ என்ற பாணியில் பதில் சொல்வதும் கம்யுனிஸ்டுகளுக்கு அழகல்ல.

இதுபோன்ற மோடி மஸ்தான் பதில்கள் நகரத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீடு தர மறுக்கிற ஜாதி இந்துவின் உணர்வாகவே புரிந்து கொள்ளப்படும்.
18 January

அவ்வளவுதான். சிம்பிள். போதும்.OK ரிலீஸ் பண்ணிக்க.

“கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்ட்டராகுறான்… தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்கறான்…” – பிச்சைக்காரன்.
இந்தப் படம் ரிலீஸ் ஆகுணும்ன்னா;

‘கோட்டா’ விற்குப் பதில் ‘தனியார்’ என்று ஒரே ஒரு வார்த்தையை மாற்றி,

“தனியாரிடம் சீட்ட வாங்கி டாக்ட்டராகுறான்… தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்கறான்…” – இடஒதுக்கிடுக்கு எதிரான பாடல் ஒரே வார்த்தையில் ஆதரவான பாடலாக மாறிடும். படத்தை ரிலீஸ் பண்ண அனுமதிக்கலாம்.

‘இது தாண்டா நம்ம சென்சார்’
19 January

One thought on “இளையராஜா – Mr, Mrs – OK ரிலீஸ் பண்ணிக்க

Leave a Reply

%d bloggers like this: