‘அது போன மாசம்’
‘Caste System in Tamil Nadu‘
தன் கட்சியில் உள்ள சக்கிலியர், பள்ளர், பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பொதுதொகுதியில், திராவிட இயக்கங்கள் ஒருபோதும் வேட்பாளராக நிறுத்தாது.
பள்ளர் – பறையர் பெரும்பான்மையாக இருக்கிற தொகுதிகளில் தன் கட்சியில் இருக்கிற சக்கிலியர் சமூகத்தைச் சேர்ந்தவரை தலித் இயக்கங்களும் ஒரு போதும் வேட்பாளராக அறிவிக்காது.
8 February at 13:11
‘அது போன மாசம்’
வடிவேலுவையே வீழ்த்தி விட்டார்கள் நம்ம ஊர் தேர்தல் அரசியல்வாதிகள். வடிவேலுக்கும் நம்ம அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம், மூணு வாரம்.
இனி தேர்தலில் கொள்கை முழக்கம் ; ‘அது போன வாரம்’
8 February at 18:28
இப்படியும் ஒரு திமுகக் காரர் – ஆனால் ம ந கூ விற்கு பொருத்தமானவர்
//அ.தி.மு.கவா தி.மு.கவா என்றால் இன்று நான் தி.மு.கவுக்கே என் ஓட்டை அளிப்பேன். தி.மு.கவா மக்கள் நலக்கூட்டணியா என்றால் இன்று நான் மக்கள் நலக் கூட்டணிக்கே என் ஓட்டை அளிப்பேன்.. – ஞாநி//
ம ந கூ உருவாவதற்கு முன் ஞாநி, திமுக விற்கு ஆதரவாகப் பேசவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் திமுக வுடன் இருக்கும்போதும் அவர் திமுக விற்குதான் ஓட்டுபோடுவேன் என்றதுமில்லை. ம ந கூ வையே அவர் திமுக விற்கு எதிராகதான் பயன்படுத்துகிறார்.
சோ வின் திமுக எதிர்ப்பிற்கும் ஞாநியின் திமுக எதிர்ப்பிற்கும் 6 வித்தியசாத்திற்கும் குறைவாகதான் இருக்கும். ஆனால், அடிப்படையில் வித்தியாசம் இருக்காது.
//மாற்று வேண்டும் என்று மெய்யாகவே கருதுகிற, அனைவரும் அவரவர் தொகுதியில், வேட்பாளராக இருக்க தகுதியானவர் என்று தாங்கள் கருதுவோர் பெயர்களை, மக்கள் நலக்கூட்டணிக்குப் பரிந்துரைத்து அனுப்பவேண்டும் என்று விரும்புகிறேன். – ஞாநி//
என்னுடைய பரிந்துரையாக ம ந கூ வின் ஆலந்தூர் சட்டமன்ற வேட்பாளராக ஞாநி அவர்களை பரிந்துரைக்கிறேன். (இதில் அவருக்கு உடன்பாடு உண்டா என்பது தெரியாது. ஒருவேளை வேறு தொகுதியை விருப்புவாரோ?)
9 February at 12:51
1965ம் ஆண்டின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு பற்றி விலாவரியான ஒரு கேள்வியை சில நாட்களுக்கு முன்பு நான் உங்களின் askmathi@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக கேட்டிருந்தேன். ஆனால், இன்னமும் உங்களின் பதில் கிடைக்கவில்லை. பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.