“முற்போக்குப் பட்டம் இலவசம்°

தலித் மக்கள் மீது வன்முறை நடந்தால்தான் இங்கு பல முற்போக்காளர்களுக்கே ஜாதி ஒழிப்பு பேச முடிகிறது.
இந்த நேரங்களில் தலித் மக்கள் மீது வன்முறை நிகழ்த்துகிறவன் கூட ஜாதிக்கு எதிராக பேசத்தான் செய்வான்.

எப்போதும் தலித் மக்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியோடு இயங்கும் ஜாதிய சமூகம், வன்முறை நிகழ்த்தும் வாய்ப்பிற்காக காத்திருக்கிறது.

எதனோடும் எப்போதும் ஜாதி எதிர்ப்புக் கூறுகளோடு இயங்குவது தான் வன்முறைகளைத் தடுக்கும்.

கொடூரத் தாக்குதலின் போது மட்டும் கண்டிப்பது,
கண்டிப்பவர்களுக்கு மட்டும் தான் லாபமாக அமையும்.
“முற்போக்குப் பட்டம் இலவசம்°

ஜாதிய அபிமானிகள் வெறியர்கள் மட்டுமல்ல,

ஜாதியையும் சில நேரங்களில் ஜாதி ஒழிப்பைக் கூட தன் பிழைப்புவாதத்திற்குப் பயன்படுத்துகிற பன்ஞ் டயலாக் பேர்வழிகளும் இது போன்ற வன்முறையின் காரணகர்த்தாக்கள் தான் – வே.மதிமாறன்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading