மீனவர்களுக்கான தமிழகரசின் சலுகையும், கூடங்குளம் அணு மின் எதிர்ப்பு உரிமையும்

கூடங்குளம் அணு மின் நிலையத்தால், மீனவ தமிழர்கள் உட்பட எல்லா தமிழர்களுக்கும் ஆபத்துதான். ஆனாலும் மீனவ மக்களே மிகப் பெரிய அளவில் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு தென் மாவட்ட மீனவ மக்களிடம் வலுவடைந்து வருகிறது. தூத்துக்குடியில் துவங்கிய போராட்டம், கன்னியாகுமரி மாவட்டம் வரை நீண்டு இருக்கிறது, உண்ணாவிரதத்தில் தொடங்கிய போராட்டம், போர்க்குணம் கொண்ட வடிவத்திற்கும் மாறி வருகிறது.

இந்தச் சூழலில் தமிழகரசு, மீன்பிடிப்பு குறைந்த காலத்தில் மீனவக் குடும்பங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் விதமாக, மீனவக் குடும்பம் ஒன்றுக்கு ஒட்டுமொத்தமாக 4,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்குவதாக இன்று (25-10-2011) அறிவித்துள்ளது.

மீனவ மக்களின் இப்போதைய கோரிக்கை, கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் என்பதே. அதை ஒட்டியே தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

ஆனால், எந்த போராட்டமும் நடத்தாமல், ஏன் கோரிக்கை கூட வைக்காமல் அதுவும் தீபாவளிக்கு முதல்நாள், திடீரென்று முதல்வர் இதை அறிவித்திருக்கிறார். தேர்தலில் கொடுத்த வாக்குறுதி என்று காரணம் சொல்லியிருக்கிறார். (பட்ஜெட்டில் தப்பிய திட்டம்!)

ஆனாலும், இந்த அறிவிப்பை மீனவர்களின் கூடங்குள அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டதோடு தொடர்பு படித்திதான் பார்க்கத் தோன்றுகிறது.

மந்திய அரசின் கூடங்குளம் அணுமின் நிலைய ஆதரவு நிலைக்கு தோதாக தமிழக அரசும் தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

அதன் தொடர்ச்சியாக இந்தச் சலுகையை கொடுத்து, கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு என்கிற வாழ்வுரிமையை கேட்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

பார்ப்போம்.

தமிழகரசு மீனவர்களிடம், கட்டை விரலை காணிக்கையாக கேட்கிறதா இல்லை கட்டை விரலை கேட்க சொன்னவர்களுக்கு எதிராகவும் மீனவ மக்களுக்கு துணையாகவும் நிற்கிறதா? என்று.

தொடர்புடையவை:

அணு உலை பாதுகாப்பானது; அந்த அய்யப்பனே நம்ப மாட்டான்!

One thought on “மீனவர்களுக்கான தமிழகரசின் சலுகையும், கூடங்குளம் அணு மின் எதிர்ப்பு உரிமையும்

Leave a Reply

%d bloggers like this: