கொலவெறி பாடலில் யாரை சொல்கிறார்; சூப்பர் ஸ்டாரையா உலக நாயகனையா?

‘கொலைவெறி’ பாடல் பற்றி, ஏன் எழுதவில்லை?

-வெ. பாலாஜி, சென்னை.

ஏன் எழுதணும்? அப்படிங்கறதனாலதான் எழுதல.

‘ஏன் இந்த கொலவெறி?’ நடிகர் வடிவேலுவால் புகழ்பெற்ற இந்த வாக்கியத்தை அவரிடம் இருந்து திருடி, ‘வொய் திஸ் கொலைவெறி’யாக மாற்றி இருக்கிறார்கள்.

யாரு வேண்டுமானாலும் எளிதில் பாடிவிட முடிகிற, பேசுவது போன்றே அமைந்த பாடல். பொறுப்பற்று. ஊதாரித்தனமாக இருப்பதை நியாயப்படுத்துகிற வார்த்தைகள். ஆங்கிலம் தெரியாதவர் எப்படி ஆங்கில வார்த்தைகளை கொச்சையான முறையில், பயன்படுத்துவாரோ அதுபோன்ற மொழி நடை.

இந்த நடை இந்தியா முழுக்க பெரும்பான்மையானவர்களால், பேசப்படுகிற, புரிந்துகொள்ளப்படுகிற நடை. இவைகளால்தான் அந்த பாடல் ‘இந்திய தேசிய பாடலாக’ நாடு முழுவதும் பிரபலமாகியிருக்கிறது.

எல்லா மதக்காரர்களும் தாங்கள் வணங்குகிற கடவுள் பற்றிய பக்திப் பாடல்களில் தரக் குறைவான, பொறுப்பற்ற வார்த்தைகள் வந்தால், கெலைவெறி கொள்கிற அளவிற்கு மாறிவிடுவார்கள்.

இப்படி, தங்கள் இறை நம்பிக்கையில் ஒழுக்கமானவர்களாக, நேர்மையானவர்களாக அடையாளப்படுத்திக் கொள்பவர்கள், சமூகம் சார்ந்து வியாபாரம், அரசியல், சினிமா, பத்திரிகை, திரை இசை என்று வருகிறபோது அதில் எவ்வளவு சீர்கேடுகள் இருந்தாலும், அதை பொறுத்துக்கொள்கிறார்கள், விரும்புகிறார்கள். பல நேரங்களில் அந்த சீர்கேடுகளை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள், என்பதை நிரூபிக்கிறது இந்தப் பாடல்.

பிரதமர் மன்மோகன் சிங் நடிகர் தனுசுக்கு கொடுத்த விருந்தின் மூலம் அந்த முறையை அங்கீகரித்திருக்கிறார். இனி, இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கன மன’ வையும் தனுஷை வைத்து, இதுபோன்றே பாட வைக்கப்பாரோ!.

குறிப்பு:

‘சூப்பர் ஸ்டாரின் மருமகன், உலக நாயகனின் மருமகனாக மாறுகிற முயற்சிகளில் இருக்கிறார்’ என்று வருகிற பத்திரிகை செய்திகளைப் பார்த்தால், தனுஷ் மீது ரஜினிதான் ‘கொலவெறி’யில் இருப்பார் போல.

அதுசரி. பாடலுக்கு இடையில் தனுஷ், “மாமாநோட்ஸ் எடுத்துக்கோஅப்படியே கையில ஸ்னாக்ஸ் எடுத்துக்கோ..” என்று யாரை சொல்கிறார்?

சூப்பர் ஸ்டாரையா? உலக நாயகனையா?

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

12 thoughts on “கொலவெறி பாடலில் யாரை சொல்கிறார்; சூப்பர் ஸ்டாரையா உலக நாயகனையா?

  1. Pingback: Indli.com
  2. சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    —->
    புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.

    ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

    இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர் <—-

  3. ”ஸ்டில்ஸ்லோ வாள்ள முத்து முச்சட்ட சூஸ்தே நிசங்கா வாள்ளித்தரும் பெள்ளி சேஸ்குண்டாரனுக்குன்னான். நூவேமண்ட்டாவ் கோபால்” (அவுங்க செல்லங் கொஞ்சுறதப் பாத்தா ரெண்டு பேரும் நிஜமாவே கல்யாணம் பண்ணிக்குவாங்கன்னு நினைக்கிறேன். நீ என்ன சொல்றே கோபால்)

    ஒரு தெலுங்கு நண்பர் என்னிடம் கேட்டது.

  4. ரெண்டு பேரையும்தான் சொல்கிறார். ஏன்னா ரெண்டு பேரும் ரெமப ஒழுக்கசீலர் இல்லெ …

  5. //ஏன் இந்த கொலவெறி?’ நடிகர் வடிவேலுவால் புகழ்பெற்ற இந்த வாக்கியத்தை //

    அப்படியா? நண்பர் வி.கோ அவர்களின் கவிதை தொகுப்பு தலைப்பிலிருந்து எடுத்திருந்தார்னு நினைச்சிருந்தேன். Jokes apart….நண்பர் மதிமாறன் அவர்கள் சினிமா கிசுகிசு செய்திகளை சுட்டிக் காட்டி பதிவில் எழுதுவதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

  6. மதியண்ணா ,

    வணக்கம் . இந்த தளத்திலுள்ள 99 % பதிவுகளை படித்துள்ளவன் என்ற முறையில் என் கருத்து ,

    – அண்ணல் அம்பேத்கர் ,தந்தை பெரியார் , இசையறிவன் ராசையா சார்ந்த பதிவுகள் செம்மையானது .

    – பாரதியார் , காந்தி , …. போன்றவர்களின் நாட்டுப்பற்று , தமிழ்ப்பற்று என்று சாதியை ,ஆரியத்தை , …. மறைமுகமாக ஆதரிப்பது போன்ற கருத்துகளின் முகத்திரையை கிழித்து , அதனுள் மறைந்திருக்கும் அசிங்கத்தை அம்பலப்படுத்துவது சார்ந்த பதிவுகள் வன்மையானது .

    – ஆனா , இப்பதிவிலுள்ள குறிப்பில் இடம்பெற்றுள்ளதை போன்ற கருத்துகளை , நீங்க தவிர்க்கணும் .

    – எனக்கு , அத்துறையினுளுள்ளவர்களின் இடர்ப்பாடுகள் , ஏமாற்றம் …. பற்றி தெரியாது , தமிழ்த்திரை படங்களின் மீது எனக்கு நம்பிக்கையில்லை( நடிகவேள் ,கலைவானர் , ராசையா தவிர்த்து – இதற்கு உங்கள் பதிவுகளும் உதவியது ) ,
    ஆனா , அரசியல் ,கல்வி ,சமூகநலன்,மொழி ,ஆய்வு , …. போன்ற துறைகளைப்பற்றிய அறிவு கொஞ்சங்கூடமில்லாம , இங்க எல்லாயிடத்திலும் திரைத்துறை மட்டுமேயுள்ளது ,
    இதுக்கு அவங்கில்ல காரணம் , நாம( மக்கள் ஒழுக்கம் ) தான் முழுப்பொறுப்பு .

    – கழிசடையிலிருந்து விலகி , வீறு நடைப்போட என்ன வழினு பாப்போம் .

    – இதுப்போன்ற ஒன்றிரண்டு வரிகளை தவிர்த்து , மற்றனைத்த பதிவுகளுக்கும் நன்றி . மதியண்ணா தொடரட்டும் உங்கள் பணி .

    – இள.செகுமரன்

  7. ‘சூப்பர் ஸ்டாரின் மருமகன், உலக நாயகனின் மருமகனாக மாறுகிற முயற்சிகளில் இருக்கிறார்’ என்று வருகிற பத்திரிகை செய்திகளைப் பார்த்தால், தனுஷ் மீது ரஜினிதான் ‘கொலவெறி’யில் இருப்பார் போல.

    அதுசரி. பாடலுக்கு இடையில் தனுஷ், “மாமா… நோட்ஸ் எடுத்துக்கோ… அப்படியே கையில ஸ்னாக்ஸ் எடுத்துக்கோ..” என்று யாரை சொல்கிறார்?

    சூப்பர் ஸ்டாரையா? உலக நாயகனையா?
    //////////

    Sikaram new varum.. Ivanga yaar nu

  8. //மதிமாறன் அவர்கள் சினிமா கிசுகிசு செய்திகளை சுட்டிக் காட்டி பதிவில் எழுதுவதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை//
    +1

  9. ஆக்க பூர்வமான சேதிகளைக் கொடுத்து பார்க்கவேண்டிய: கவனிக்கவேண்டியவரின் தகுதியில் இருந்து தரம் தாழ்த்தி இவ்வாறு வெளியிடுவதால் யாருக்கு லாபம். ஏற்கெனவே சீரழிந்து இருக்கும் கலாச்சார கந்தரகோளத்துக்கு மற்றுமொரு கழிசடை அவதானிப்பே இது. தவிர்க்கலாம்

  10. திருமதி பழனிச்சாமி என்றொரு படம். சத்யராஜ், சுகன்யா நடித்த படம். கமர்ஷியல் விஷயங்களை நீக்கி பார்த்தால் அதில் சொல்லியிருக்கும் சுவாரஸ்யங்களை குறைவாகவே யோசித்த திரைக்கதை தான் படத்திற்கு மெயின் வில்லன். கதைக்குள் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. பொன்வண்ணன் செய்யும் செங்கல் பில்டப் எல்லாம் படு ஓவர். பாக்யராஜ் வந்து ரூல்ஸ் சொன்னவுடன் எதுவும் சொல்லாமல் போய்விடுகிறார் வில்லன். சரி. வழக்கமான க்ளைமாக்ஸ் வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்திருக்கலாம். கதாநாயகி விமலை பார்த்த அடுத்த சில காட்சிகளிலேயே அவர் மீது காதல் கொள்ள ஆரம்பித்துவிடுகிறார். அதெப்படி பார்த்த மாத்திரத்திலேயே காதல் வருகிறது?. அப்படி காதல் வரும் அளவிற்கு விமல் ஏதும் செய்ததாகவும் தெரியவில்லை. எட்டிப் பார்த்தால் யார் யாரோடு நிற்கிறார்கள் என்று தெரிந்து விடக்கூடிய ஊரில் ஹீரோவும், ஹீரோயினும் சேர்ந்து சுத்துவது பற்றி ஊர்காரர்கள் ஏதும் கண்டு கொள்ளவேயில்லை. ஒரு வேளை கதை அதை பற்றி இல்லையென்பதால் கவலைப்படாமல் இருந்துவிட்டீர்களோ? அந்த குருவிக்கார கேரக்டர் எதற்கு? அதனால் என்ன பலன். ஹீரோ இடைவேளைக்கு முன் ஊருக்கு போவதை தடுத்து நிறுத்துவதை தவிர?. பாடல் காட்சிகளை எடுப்பதில் மிகவும் கற்பனை வறட்சி தெரிகிறது. என்னா மாதிரியான பாடல் அந்த போறானே..? நிஜத்தில் அந்த காதல் ட்ராக் மட்டும் நம்முள் ஏறியிருந்தால் போறானே பாடல் உருக்கியிருக்கும். ஆனால் படத்தை நேரத்தை நிரப்ப இட்ட பாடலாய் அமைந்துவிட்டது.அடுத்த காட்சி என்னவென்று படத்தில் நடித்திருக்கும் குழந்தைகள் கூட சொல்லிவிடக்கூடிய திரைக்கதையமைத்திருப்பது தான் பெரிய மைனஸ், நல்ல கருத்தை முன் வைத்தாலும் உட்கார முடியாமல் நெளிய வைக்கிறது என்பதை வருத்தத்துடன் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது.

  11. வாழ்கையை அழகுபடுத்து வது அழகான பொய்கள்தான்.. அவளின் மௌனத்துக்கு 1000 பக்கங்கள் உரை எழுதலாம்.. நான் இன்றும் பெரிதாக ரசிப்பதும் வியப்பதும் பெண்ணின் உணர்வுகள்தான்.. It is wonderful to be a woman….. Dostoevosky எப்படி அத்தனை உணர்வுகளையும் ஒரே புத்தகத்தில் அடைத்து உள்ளாரோ அப்படி தான் பெண்களின் மனதும் .. ஆழம் அதிகம்.. Dostoevosky யை படித்து விட்டு மனநிலை எப்படி இருக்கும் என்று ஒவ்வரு வரியும் படித்தவர்களுக்கு தெரியும்.. கொஞ்சம் பைதியம் பிடித்தது போல் இருக்கும் .. அதே உணர்வு தான் அந்த ஆழத்தை தொடும் போதும் .இத்தனை உள்ளவர்கள் எப்படி அழகாக இல்லாமல் இருக்க முடியும்? இந்த உணர்வுகள் எதுவும் இல்லை என்றால் அழகு இல்லை என்று சொலுங்கள் ஒத்து கொள்கிறேன்.. உருபுகளை கடந்து உணர்வுகளை பாருங்கள் எல்லா பெண்களும் அழகாக தான் தெரிவார்கள்.

  12. onnu theringikonga mathi, oruthangala pathi kevalama eluthi pugazha sambathikka midiyathu.

    why this kolaveri – intha line vadivelu sonnathala vantha varthaya
    oruthan ninaikirathu innoruthan ninaikaruthu illiya.

    ippadi appatama dhanush – sruthi pathi comment adikiringale
    ithe unga ponna pathi ithu mathiri comment adicha inna pannuvinga
    varthaye vittuta alla mudiyathu sir

    sila katuraigal nall irrukku aana ithu mathiriyamnatha kandippa ethukka mudiyala……..

Leave a Reply

%d bloggers like this: