இதுதான்.. இது மட்டும் தான்..

எளிய மக்களின் வாழ்க்கைக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்து, இந்து மதத்தை, ஜாதியை, பார்ப்பனியத்தைக் கந்தலாக்கிய டாக்டர் அம்பேத்கரை எதிர்த்து அல்லது புறக்கணித்து விட்டு;

இந்து வெறி, ஜாதி வெறியோடு கட்சி நடத்திய பால்தாக்ரேவிடம் தமிழ் தேசிய கூறுகளைப் பார்ப்பது
தமிழ் உணர்வல்ல.. தலித் விரோத இடைநிலை ஜாதி உணர்வு.
மணியரசனிடம் மட்டுமல்ல, பழ. நெடுமாறன் உட்பட இன்னும் பல தமிழ் தேசியவாதிகளிடம் இருப்பது இதுதான். இது மட்டும் தான்.
22 February at 12:17

பாரதிராஜாவை எதிர்த்த வைகோ ஏன்..?; ஒண்ணுமே புரியல.. உலகத்துல..

‘பெரியாரிடம் தத்துவம் இல்லை’;அப்போ பிரபாகரனிடம்..?

இரண்டில் ஒன்று.. எது?

5 thoughts on “இதுதான்.. இது மட்டும் தான்..

 1. //தலித் விரோத இடைநிலை ஜாதி உணர்வு//

  பெரியாரிஸ்டுகளிடம் எழுப்பும் வினா இது தான்: பெரியார் தம் ஆயுள் பூராவும் சொன்ன பார்ப்பனீய எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பாக அறியப்பட்டு பார்ப்பனர்களின் நிலையைக் கிழித்து தொங்க விட்டாயிற்று. பெரியார் அடிப்படையில் எதிர்த்த ஜாதி மறுப்பு வேர் ஊன்றவே இல்லை. கல்வி யிலும், அரசு வேலையிலும் பின்பு தனியார் நிறுவன வேலையிலும் அளவுக்கு அதிகமாக இருந்த பார்ப்பனர் குறைக்கப்பட்டு அந்த இடங்களுக்கு வேறு ஜாதியினர் வந்து விட்டனர். நன்று. ஆனால் இவ்வாறு வந்தவர்களில் இடைப்பட்ட ஜாதியினர் அதிகம்; அந்த அளவுக்கு தாழ்த்தப்பட்டவர் (தலித்) பழங்குடியினர் வரவில்லை. இந்த இடை நிலை ஜாதியினர் புதிய பார்ப்பனர் ஆகி தலித்துககளின் மேல் சவாரி செய்கின்றனர். இது பெரியாரிஸ்டுகளின் தோல்வியா? பெரியாரிசம் பார்ப்பன எதிர்ப்பை தாண்டி சிந்திக்க, செயல்பட மறுக்கிறது. பெரியாரிசம் என்று பஜனை செய்யும் முன்னோக்குவாதிகள், பகுத்தறிவுப் பாசறைகள் தம் அணுகுமுறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

 2. பிற்படுதபட்டவனுக்கும் ,மிகவும் பிற்படுதபட்டவனுக்கும் ,தாழ்த்தபட்டவனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன .?

  முன்னேறிய வகுப்பு/ஜாதி நா என்ன அர்த்தம் ?

  இதெல்லாம் தவிர சிறுபான்மையினரு அப்ப டின்றவங்க யாரு?

  இப்போ ஒரு உதாரணம்

  முன்னேறிய வகுப்புன்னா கலைஞர்னு எடுத்துக்குவோம்…

  பிற்படுதபட்டவன்னு நாம சொல்றது ஸ்டாலின் ஐயவ

  மிகவும் பிற்படுதபட்டவன்னு சொல்றது கணிமொழிய

  தாழ்தப்பட்டவன்னு சொல்றது அழகிரி அண்ணன்

  சிறுபான்மையினர் நு சொல்றது மாறன் ராசா முக முத்து செல்வம் போன்றவர்கள் ..

  இப்போ சொல்லுங்க யாருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கணும் நியாயமா

 3. The blog-author has refused to give any comments, despite specific request. Any blog-author should encourage discussions on the points touched by him/her and give his/her own response. (Mr Madhimaran does when any follower appreciates some speach/quote!) By the way, what I have said by and large forms the core of the post: ” Despite claims that Tamil Nadu is Periyar’s land and that a casteless and equitable society prevails here, the truth stares at us. The claims of Dravidian parties ring hollow because Periyar never intended to create a casteless society. His primary goal was to pull down the brahminical power structure and impose a non-brahminical, non-dalit, intermediate caste hold on political and administrative power in the state. He succeeded in this.”
  http://idlyvadai.blogspot.in/2015/03/blog-post_11.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+Idlyvadai+(IdlyVadai+-+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88)

Leave a Reply

%d bloggers like this: