பாரதி-தாசன்; பி.ஜே.பி, சி.பி.எம், ஆர்.எஸ்.எஸ், சி.பி.ஐ
பாரதியின் ‘இந்து’ உணர்வை நான் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியபோது, எனக்குப் பதில் சொல்வதாக,
“பாரதிதாச‘னே’ பாரதியை தீவிரமாக ஆதரித்தவர்.” என்று ‘னே’ போட்டுப் பாரதிதாசனை மிகப் பெரிய கவிஞராக விளித்தவர்கள் யாரும்; அப்போதும், இப்போதும், எப்போதும் அவரை ஒரு கவிஞராக, பாரதியைக் கொண்டாடுவது போல் கொண்டடுவதில்லை.
பார்ப்பனர்கள், இந்து அமைப்புகள் மட்டுமல்ல, கம்யுனிஸ்டுகள், பகுத்தறிவுப் பொங்கும் பேராசிரியர்கள், ‘நவீன’ பெரியாரியல் ஆய்வாளர்கள் வரை இப்படித்தான்.
அதாவது பாரதிதாசனை, பாரதிக்கான அடியாளாகப் பயன்படுத்த மட்டும் அவரைப் பெரிய கவிஞராகச் சுட்டுவார்கள்.
கம்யுனிஸ்டுகளில் பெரியாரை விமர்சித்தவர்கள்கூட பாரதியை விமர்சித்ததில்லை; ‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’ மட்டுமே பாரதியைக் கடுமையாக விமர்சித்து, பாரதிதாசனை ஆதரிப்பவர்கள்.
தவிர, மற்றவர் ‘இந்து’ பாரதிக்குத் தாசனாகவும் ‘பகுத்தறிவு’ பாரதிதாசனை ‘இந்து’ மணிரத்தினத்தை மதிக்கும் அளவிற்குக் கூட பொருட்படுத்தியவர்கள் இல்லை.
*
பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத், சி.பி.எம்., சி.பி.ஐ., இந்திய கம்யுனிஸட் கட்சிகள்; பாரதியை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராகக் கொண்டாடுவதும், பாரதிதாசனை முற்றிலுமாகப் புறக்கணிக்கவும் செய்கிறார்கள்.
‘நமக்குள் சில விசயங்களில் முரண்பாடு இருக்கலாம். ஆனால், இன்றைய சூழலில், எது நம்மை இணைக்கிறதோ அதோடு சேர்ந்து நாம் செயல்படவேண்டும்’ என்று ‘தோழர்’கள் அடிக்கடி சொல்வார்கள்.
இந்தக் கொள்கை ஒற்றுமையோடு தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள்.
பாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்
பாரதியும் பாரதிதாசனும் சின்ன விவாதமும்
கம்யுனிஸ்டுகளில் பெரியாரை விமர்சித்தவர்கள்கூட பாரதியை விமர்சித்ததில்லை; ‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’ மட்டுமே பாரதியைக் கடுமையாக விமர்சித்து, பாரதிதாசனை ஆதரிப்பவர்கள்.
மணிமாறன் ஒருகால வரலாற்றைப் போகிறப்போக்கில் ஒருபத்தியில் கூற நினைப்பது தவறு. இந்து உணர்வில் வளர்ந்த பாரதியிடம் அதைத் தாண்டிய பார்வை கவிதையில் இருந்ததால், கட்டுரையில் இல்லை. வாழ்க்கையில் பார்ப்பனர்களால் புறக்கணிக்கப்பட்டார். பாரதிதாசன் இது பற்றி நிறைய எழுதியுள்ளார். சமுதாயத்தில் ஓரளவு புதிய சிந்தனை வரும்போது அதை் ஏறறல் தவறு என்ற உங்கள் சிந்தனை அடிப்படைவாதம். உலகமே அடிப்படைவாதத்தை் ஏறக வேண்டும் என நீங்கள் நினைப்பது தவறு.
பாரதிதாசனைப் போகிறபோக்கில் விமர்சிக்கிறீர்கள். உங்களையும் மக இக தவிர எல்லோரும் பாரதியை ஆதரித்தது தவறு என்கிறீர்கள். பாரதியை, அவர் படைப்பில் உள்ள நல்ல சிந்தனைகளைத்தான் சமுதாயம் ஏற்கும். சமுதாயம் என்பது எல்லவற்றிலும் நல்லது தேடும். பாரதிதாசனைஆதரி, பாரதியாரை ஆதரிக்காதே என்பதே அடிப்படைவாதம்.