மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு: அன்று புரட்சித் தலைவர் இன்று புரட்சித் தலைவி

அன்று மெரினாவை அழகாக்க மீனவர்களை அப்புறப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தி சென்னை மீனவர்களை சுட்டுக் கொன்றார், புரட்சித்தலைவர்.

இன்று மனித உயிரை பலிகொண்டு, அணுஉலையை பாதுகாக்க, இடிந்தகரை மீனவர்களின் மீது துப்பாக்கி சூடு நடத்துகிறார் புரட்சித்தலைவி.

தனது போர்குணத்தால், சென்னை மீனவர்கள், ‘மீனவநண்பன்’ எம்.ஜி.ஆருக்கு தக்கப்பாடம் புகட்டினார்கள். இறுதியில் சென்னை மீனவர்களே வெற்றி பெற்றார்கள்.

அணுஉலைக்கும், காவல் துறைக்கும் எதிரான போராட்டத்தில்  போர்குணம் கொண்ட மீனவர்களே வெற்றிபெறுவார்கள்.

புரட்சித்தலைவிக்கும், சோனியா காந்திக்கும் போராட்டம் என்றால் என்ன? மீனவன் என்றால் மீன் பிடிப்பவன் மட்டுமல்ல என்பதை புரியவைப்பார்கள்.

*

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் போராட்டம் வெற்றிபெற, பத்திரிகையாளர்களின் சதிகளை ,  மோசடிகளை முறியடிப்போம்.

தொடர்புடையவை:

மீனவர்களுக்கான தமிழகரசின் சலுகையும், கூடங்குளம் அணு மின் எதிர்ப்பு உரிமையும்

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பும் 8 மணிநேர மின்வெட்டு எதிர்ப்பும்

அணு உலை பாதுகாப்பானது; அந்த அய்யப்பனே நம்ப மாட்டான்!

தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்

3 thoughts on “மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு: அன்று புரட்சித் தலைவர் இன்று புரட்சித் தலைவி

  1. ஆக மொத்தத்தில் யாரு வந்தாலும் நிலைமை மாறுவதாக இல்லை…எல்லாம் ஒன்று தான்….

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading