ஏ.ஆர். ரகுமானும் `ரீமிக்சும்`

ஏ.ஆர். ரகுமான் சர்வதேச விருது வாங்கியிருக்கிறார். அதை ஒட்டி 8.1.2008 அன்று எழுதிய இந்தக் கேள்வி-பதில் ஓராண்டு கழித்து, மீண்டும் பிரசுரிக்கப்படுகிறது. இன்றைய திரைப்பட இசையமைப்பாளர்கள் பழைய பாடல்களையே ‘ரீமிக்ஸ்’ என்ற பெயரில் தருகிறார்களே? இது என்ன முறை? –சிவகுமார். கதையின் … Read More

சட்டக் கல்லூரி சண்டையும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் வன்முறையும்

சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையை தொலைக்காட்சியில் பார்த்தீர்களா? ஐயோ என்ன கொடுமை? அதைப் பார்த்த அன்று முழுவதும் என்னால் சரியாக சாப்பிடக் கூட முடியவில்லை. -எஸ். சௌமியா அது சென்னை சட்டக் கல்லூரி அல்ல. சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் … Read More

ஒபாமா: அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்

கறுப்பர் இனத்தில் இருந்து முதல்முறையாக அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்புமனிதன்.  இது புரட்சிகர மாற்றம்தானே? –விமல் இதற்கு முன்பு பலம் பொருந்திய பதவி ஒரு கறுப்பினத்தவருக்கு  தரப்பட்டது. அது உலகம் முழுக்க அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட … Read More

ரஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

ராகவேந்திரா கல்யாணமண்டபத்தில் தனது ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, கர்நாடகாவை கடுமையாக விமர்சித்து பேசியது பாராட்டுக்குரியதுதானே? -விமல். இதற்கு முன்பு தமிழர்களுக்கு எதிராக வன்முறை செய்த கன்னடர்களை விமர்சிக்காமல் இருந்ததற்குக் காரணம், கர்நாடகாவில் இவர் படம் ஓட வேண்டும் என்பதுதற்காகத்தான். ஒக்கேனக்கல் … Read More

கே.பி.சுந்தராம்பாள், தமுஎசவிற்காக-சிபிஎம் டி.கே.ரங்கராஜனும்-எம்.ஆர்.ராதாவிற்காக கலைவேந்தனும்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கே.பி.சுந்தராம்பாளுக்கு விழா எடுப்பதைப் பற்றி திரு.கலைவேந்தன் என்பவர் எனக்கொரு கேள்வி அனுப்பியிருந்தார். அதற்கான பதிலை நான் எம்.ஆர். ராதாவும் – கே.பி. சுந்தராம்பாளும் – தமுஎசவும் என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தேன் (https://vemathimaran.com/2008/08/04/article104/) அந்தப் பதிலை … Read More

எது அநாகரீகம்?

எவ்வளவோ நாகரீகம் வந்து விட்டது. ஆனால் இன்னும் அரசியல் கட்சி மேடைகளில் துண்டு போர்த்துவதும், அரசியல்வாதிகள் தோளில் துண்டு போட்டுக் கொள்வதுமாக இருக்கிறார்களே, இந்த அநாகரீகமான துண்டுக் கலாச்சாரம் ஒழியவே ஒழியாதா? எஸ்.என்.சிவசைலம், சேலம். தோளில் துண்டு போடுகிற கலாச்சாரம், இடுப்பில் … Read More

ஆனந்த விகடனும் – பெரியாரும்

ஆனந்த விகடனை குறை கூறுகிறீர்களே, அந்த இதழ்தானே இன்று பெரியார் தொடரை மிக சிறப்பாக வெளியிட்டது? -சி. சாமுவேல். சினிமா செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து கிசு கிசு பாணியிலே அனைத்து செய்திகளையும் எழுதுகிற ஆனந்த விகடன், கிசு கிசு செய்திகளையும் தாண்டி, … Read More

இந்து என்றால் ஜாதி வெறியனா?

எனக்கு தயை கூர்ந்து ஒரே ஒரு விளக்கம் மட்டும் கூறுங்கள். ஒருவன் இந்து மதத்தில்(அல்லது ஏதோ ஒரு மதத்தில்) பிறந்ததால் மட்டுமே ஜாதி வெறியன் என்று சொல்லிவிட முடியுமா? நான் பிறந்தது ஒரு இந்து குடும்பத்தில் (அதுவும் ஒரு பார்பன குடும்பத்தில்) … Read More

மரணத்திற்குப் பின்னான வாழ்க்கை

மனிதன் மரணம் அடைந்த பிறகு, அவன் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் நரகத்துக்குப் போவான் அல்லது சொர்க்கத்திற்குப் போவான் என்கிற நம்பிக்கை எல்லா மதத்தினரிடமும் இருக்கிறது. சொர்க்கம், நரகம் என்பதை விட்டுவிடுங்கள். மனிதன் மரணத்திற்குப் பிறகு எங்கு போவான் என்பதை அறிவியல் … Read More

சைமனா சீமான்?

‘சைமன் என்கிற சீமான் இந்து மதத்தை திட்டி பேசுகிறார்’ என்று பி.ஜே.பியை சேர்ந்த எச். ராஜா சொல்லியிருக்கிறாரே? -எல். சுரேஷ்.   சீமான் – சைமன் இல்லை. அவர் கிறித்தவரும் இல்லை. அவருடைய பாஸ்போர்ட்டிலிருந்து அவரை பற்றிய ஆவணங்கள் எல்லாமே சீமான் … Read More